வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

64பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கீழக்கரை கிராமத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் , மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உப்பு ஓடையில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை பணியினையும், உப்பு ஓடை வாய்க்கால் ரூ. 4. 5 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, எசனை ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மாணவியர்கள் தங்கும் அறை, சமையலறை, இரவு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், எசனை நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி கோதுமை சர்க்கரை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலைகள் குறித்து ஆய்வு செய்து, குடும்ப அட்டைதாரருக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் தரமாக வழங்கிட மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி