மலையாளப்பட்டி: பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

69பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, மலையாலப்பட்டி ஊராட்சி, சாஸ்திரிபுரம் கிராமத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், அப்பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சாலை வசதி, குடிநீர் கிணறு பழுது நீக்குதல் பகுதி நேர நியாய விலை கடை, பேருந்து வசதி போன்ற கோரிக்கைகளை வைத்தனர், கோரிக்கை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது வேப்பந்தட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ரெங்கராஜ் மலையளப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர கோவிந்தராஜ் வேப்பந்தட்டை ஒன்றிய அவைத்தலைவர் அம்பேத், மலையாளப்பட்டி ஊராட்சி துணை தலைவர் சேகர், கிளை செயலாளர்கள் தனபதி, பாலசுப்ரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி