பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11. 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குழந்தைகள் நல மைய கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று குழந்தைகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்