பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் பேரணியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியை மேற்கொண்ட மாவட்ட காவல்துறையினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 05. 10. 2024 ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் நாளை பெரம்பலூரில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பேரணியொட்டி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கடைவீதி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் நகரத்தின் பல முக்கிய பகுதிகளில் மோப்பநாய் படை பிரிவினர் (Gog squad) மற்றும் வெடிகுண்டு கண்டறிந்து அதனை அகற்றும் குழுவினர் (BDDS) ஆகிய இரண்டு குழுவினரும் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, கடை வீதிகள் மற்றும் பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு சோதனை மற்றும் மோப்ப நாய்களை கொண்டு துப்பறியும் சோதனை ஆகியவற்றை மேற்கொண்டனர்.