பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமையான இன்று (அக்.,5) பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் ஸ்ரீதேவி சமேத பூதேவி ஸ்ரீமதன கோபாலன் மூலவர் (ம) உற்சவர் ஸ்ரீமரகதவல்லி தாயார் மூலவர் (ம) உற்சவர் கம்பத்து ஸ்ரீஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் கோவிந்தா முழக்கம் இட மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.