'மறக்க வேண்டாம் தாய்மொழி காக்கத் தங்கள் உடலுக்கும் உயிருக்குமே தீவைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள். அந்த நெருப்பின் மிச்சம் இன்னும் இருக்கிறது எங்களிடம். "திராவிட" என்ற சொல்லை நீக்கிவிட்டு தேசிய கீதத்தைப் பாடமுடியுமா? தமிழ்த்தாய் வாழ்த்தில் தவிர்ப்பதற்கு மட்டும் யார் தைரியம் கொடுத்தது? திராவிடம் என்பது நாடல்ல இந்தியாவின் ஆதி நாகரிகத்தின் குறியீடு. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
மானமுள்ள தமிழர்கள் தெருவில் இறங்கி தீமைக்குத் தீயிடுவார்கள்' என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.