தொண்டாமுத்தூர் - Thondamuthur

கணபதி: துக்க வீட்டில் தீ விபத்து.. மேலும் இருவர் உயிரிழப்பு

கணபதி: துக்க வீட்டில் தீ விபத்து.. மேலும் இருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் கணபதி கே.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் ராமலட்சுமி(83). உடல்நலக் குறைவால் கடந்த 14ம் தேதி மாலை உயிரிழந்தார். அவரின் உடல் வைத்திருந்த பிரீஸர் பாக்ஸுக்கு மின் இணைப்பு கொடுக்கும் வகையில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டது. அதில் பெட்ரோல் ஊற்றிய போது தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் ராமலட்சுமியின் உறவினர்கள் பத்மாவதி(53) பானுமதி(50), ராஜேஸ்வரன் (55), ஸ்ரீராம்(19) ஆகியோர் வீட்டிற்குள் பரவிய தீயில் சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திலேயே மருமகள் பத்மாவதி தீயில் கருகி உயிரிழந்தார்.  மகள் பானுமதி, மகன் ராஜேஸ்வரன் ஆகியோர் 60 சதவீதம் தீக்காயத்துடனும், ஸ்ரீராம் 30 சதவீதம் தீக்காயத்துடனும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பானுமதி நேற்று முன்தினம்(நவம்பர் 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளியான ராஜேஸ்வரன் நேற்று(நவம்பர் 20) சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஸ்ரீராமுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా