ஆலந்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய காளான் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் படி நேற்று தனிப்படை காவல்துறையினர் இக்கரை, தொண்டாமுத்தூர் பகுதியில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பி. என் புதூர் பகுதியைச் சேர்ந்த அமரன் (30), கர்நாடகாவைச் சேர்ந்த சதீஷ் (31), ஆலந்துறையைச் சேர்ந்த பிரசாந்த் (30), சரவணகுமார் (26), சாய்பாபா காலனியைச் சேர்ந்த நிஷாந்த் (30). ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 12, 90, 000 மதிப்புள்ள போதை தரக்கூடிய காளான்-589 கிராம், 40000 மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா, 13 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மற்றும் 4 இரண்டு சக்கர வாகனம், 6 செல்போன்கள், 2 லேப்டாப், பணம் எண்ணும் இயந்திரம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஐந்து பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.