தொண்டாமுத்தூர் - Thondamuthur

கோவை: தாயைப் பிரிந்த குட்டி யானை - கூட்டத்துடன் இணையுமா?

கோவை, பன்னிமடை அருகே காட்டு யானைக் கூட்டம் சாலையை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தனியாக கிடந்த குட்டி யானையை கூட்டத்துடன் இணைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  நேற்று முன்தினம் (டிசம்பர் 23) இரவு, பன்னிமடை இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் கே.ஆர்.எஸ் பேக்கரி அருகே காட்டு யானைக் கூட்டம் சாலையை மறித்து நின்றது. வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால், அங்கு 1 மாதமான குட்டி யானை தனியாக இருந்தது.  வனத்துறை பணியாளர்கள் குட்டி யானையை பிடித்து யானை கூட்டத்துடன் சேர்க்க முயற்சித்த போது, அருகில் பெண் யானை உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் யானையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், குட்டி யானையை கூட்டத்துடன் இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருதமலையில் உடல்நிலை பாதித்த தாய் யானையை விட்டு பிரிந்த குட்டி யானை, தாயுடன் இணையாததால் முதுமலையில் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை கூட்டத்தை விட்டு பிரிந்துள்ளதால், வன உயிரின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குட்டி யானை கூட்டத்துடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా