2025-ம் ஆண்டு மொத்தம் நான்கு கிரகணங்கள் ஏற்படப் போகின்றன. மார்ச் 14 ஏற்படும் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படாது. மார்ச் 29 ஏற்படும் சூரிய கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க முடியாது. செப்டம்பர் 7 உருவாகும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும். அன்று சந்திரன் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறத்தில் மாறும். செப்டம்பர் 21, 22 தேதிகளில் ஏற்படும் சூரிய கிரகணத்தை நியூசிலாந்து, தெற்கு பசிபிக், அண்டார்டிகா போன்ற பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியும்.