கோவை: எம். ஜி. ஆர் நினைவு நாளில் அதிமுகவினர் உறுதிமொழி!
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காமாட்சிபுரம் பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 37- வது நினைவு நாளை ஒட்டி ஒட்டி நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் விபி கந்தசாமி கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் எம்ஜிஆரின் நினைவை போற்றும் வகையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டு புகழஞ்சலி முழக்கங்கள் இடப்பட்டது. பின்னர் வருகின்ற 2027 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை அமைப்பதற்காக உறுதிமொழி ஏற்கப்பட்டது. அனைத்துலக எம். ஜி. ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு கா. அசோகன், ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி அசோகன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் குமரவேல், வி. பி கந்தவேல், இருகூர் நகர கழக செயலாளர் எம். கே. எம் ஆனந்தகுமார், பள்ளபாளையம் நகர கழக செயலாளர் சண்முகம், கலங்கள் ஊராட்சி தலைவர் ரங்கநாதன், எம். ஜி. ஆர் மன்ற செயலாளர் நடராஜன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.