கோவை அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஒரு நபர் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின்படி, போதையில் இருந்த அந்த நபர் மேல் சட்டையின்றி டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரை பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பாக கீழே இறக்கி மீட்டுள்ளனர். பின்னர் அவரை காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காவல் துறையினர் நடத்தி வரும் விசாரணையில் அந்த நபரின் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.