கோவை: பட்டா மற்றும் அடிப்படை வசதிகோரி போராட்டம்!

51பார்த்தது
கோவை மாவட்டம் மதுக்கரை தாலுக்கா செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் மற்றும் கலைஞர் நகர் பகுதி மக்கள், பட்டா வழங்கக் கோரியும் அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 2006 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சிலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். தற்போதைய சூழ்நிலையில், 14 வது வார்டு கவுன்சிலர், இ-பட்டா என்ற பெயரில் ஏற்கனவே பட்டா பெற்றுள்ள நபர்களுக்கு தெரியாமல் அவற்றை நீக்கம் செய்து விட்டு, தகுதியில்லாத வேறு நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஒதுக்கீடு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து கவுன்சிலரிடம் கேட்டபோது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபரை வைத்து மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்சினைகள் குறித்து வட்டாட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு பல முறை எழுத்து மூலமாக மனுக்கள் கொடுத்தும், இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி