கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாள் விழாவில் பாஜக எம்.எல்.ஏ முனிரத்னா என்பவர் கலந்து கொண்டார். அப்போது மர்மநபர்கள் சிலர் அவர் மீது முட்டை வீசியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு அம்மாநில பாஜக தலைவர் விஜயேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.