திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வைலாகி வருகிறது. அந்தப் பத்திரிகையில், பீடி குமாரிக்கும், கேன்சர் குமாருக்கும் திருமணம் என அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகையானது இந்தி மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், போதைப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திருமண பத்திரிகை எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.