கோவை: 45. 75 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக் கூடம் திறப்பு

54பார்த்தது
கோவை மாவட்டம், சூலூர் தொகுதி, மயிலம்பட்டி ஊராட்சி, தனம் நகரில் ரூ. 45. 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக் கூடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த சமுதாய நலக் கூடம் கோவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் P. R. நடராஜன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது. மயிலம்பட்டி ஊராட்சி தலைவர் சாரதாமணி குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் P. R. நடராஜன் கலந்து கொண்டு சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் V. P. கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் கோபால்சாமி, சூலூர் ஒன்றிய கவுன்சிலர் சன் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் VMC மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி