தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 2025 ஜனவரி மாதம் முதல் QR CODE முறையில் மது விற்பனை செய்யப்படவுள்ளது. மது விற்பனையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர QR CODE முறை, ராணிப்பேட்டை, திருச்சி, திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் ஜனவரியில் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த முறை அமலுக்கு வந்ததும், வாடிக்கையாளர்களுக்கு பில் அளிக்கப்படும்.