எம்.ஜி.ஆர் துணை மின்நிலையத்தில் மின் நிறுத்தம் ரத்து
கோவை எம். ஜி. ஆர். ரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கட்கிழமை) அந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் பராமரிப்பு பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழக்கம்போல் மின் விநியோகம் நடைபெறும் என செயற்பொறியாளர் ஆர். பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார்.