சிவானந்தா காலனி: தர்ணாவில் ஈடுபட்ட எல்ஐசி முகவர்கள்

79பார்த்தது
கோவை சிவானந்தா காலனி பகுதியில் அகில இந்திய LIC முகவர்கள் சங்கம் (LICAOI) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று ஒருநாள் அடையாள தர்ணா ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முகவர்கள், முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய கமிஷன் முறையை நடைமுறைப்படுத்துதல், குறைந்தபட்ச காப்புத் தொகையை 1 லட்சமாக குறைத்தல், அனைத்து திட்ட பாலிசிகள் எடுப்பதற்கு அதிகபட்ச நுழைவு வயதை 65 ஆக உயர்த்துதல், பாலிசிதாரரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான GST வரியை ரத்து செய்தல், மற்றும் பாலிசிகளுக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி