கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நீலாம்பூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் மற்றும் சத்துணவு கூடம் திறப்பு விழா மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா நிகழ்ச்சிகள் நேற்று மாலை நடைபெற்றது. நீலாம்பூரில் நடைபெற்ற விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி தலைமையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தினை தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் , கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துராஜ் , ஹேமலதா, பொதுக்குழு உறுப்பினர்கள் ரகு துரைராஜ் ஏர்போர்ட் ராஜேந்திரன் அரசூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்டிட திறப்பு விழா முடிந்தவுடன் பள்ளி குழந்தைகளுடன் அமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.