கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சியில் பொதுமக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதி ரூபாய் 19. 50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டுவதற்கு பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் வி. பி கந்தசாமி நேற்று துவக்கி வைத்தார். அவருடன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், தோப்பு கா அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் காந்திமதி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.