கோவை: சி.பி ராதாகிருஷ்ணன் அம்பேத்கர் குறித்து கருத்து

59பார்த்தது
மஹாராஷ்டிரா ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்தப் பேட்டியில் அவர் டாக்டர் அம்பேத்கர், தமிழக அரசியல் நிலைமை, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார். அம்பேத்கர் குறித்து பேசிய அவர், அம்பேத்கர் அவர்கள் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிறகு மிகப்பெரியவராக போற்றக்கூடிய ஒரு தலைவர். அம்பேத்கர் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். அவரது புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது ஒவ்வொருவரது கடமை என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி