கோவை திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதிக்கு வந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் வெளியான மெய்யழகன் திரைப்படத்தை ரசித்து பார்த்ததாகவும் அதை தொடர்ந்து புஷ்பா படம் பார்த்ததாகவும், தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த படம் ஜனவரி 14 ம் தேதி வெளியாவதாகவும், தமிழில் வளையம் மற்றும் சிஸ்டர் என்ற இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும் வடசென்னை இரண்டாம் பாகத்தில் தனக்கு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் நிச்சயம் நடிப்பேன் என்றும் தெரிவித்தார். இதேபோல் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தான் தளபதியின் ரசிகை, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு நாம் கண்டிப்பாக சப்போர்ட் பண்ணி தானே ஆக வேண்டும், நல்லது நடந்தால் சந்தோஷம் என்றும் ஒரு நடிகராக அவரை மிகவும் பிடிக்கும் என்பதை நிறைய இடங்களில் கூறி இருக்கிறேன், அவர் அரசியல்வாதியாக களம் இறங்க இருக்கிறார், மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் நல்லது தானே என கூறினார்.