கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் சி. எஸ். ஐ சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தின் 6 வது ஆண்டு அசன பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று
காலையில் நடைபெற்ற ஆலய ஆராதனையில் ஆயர் கிருபை லில்லி
சபை மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி, வருகிற ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என்றும் தேவன் அனைவரையும் ஆசீர்வதித்து வழி நடத்துவார் என்று அருளுரை வழங்கினார்.
பின்பு நடைபெற்ற அசன பண்டிகையை
ஆயர்கள்
கிருபை லில்லி,
சாமுவேல் ஜான்சன், எபினேசர் மணி ஆயர்கள், திருமண்டல பொருளாளர் அமிர்தம் தொடங்கி வைத்தார்கள். இதில் திருமண்டல உறுப்பினர் டார்லின், செயலாளர் திஜயா டார்லின்,
பொருளாளர் பொன்ராஜ் மற்றும் சபை அங்கத்தினர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு அங்கு 5000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.