சூலூர்: சிக்னல் கம்பம் சரிந்து விபத்து!

83பார்த்தது
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானப்படை தளம் உள்ளது. இப்பகுதியில் காடாம்பாடி கிராமத்திற்கு செல்வதற்காக போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. சூலூர் காவல் துறையால் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம், அடையாளம் தெரியாத லாரி மோதி சென்றதால் நேற்று சாலையில் சரிந்தது. இதனால், இருட்டில் வாகன ஓட்டிகள் கம்பத்தை கவனிக்காமல் எப்பொழுதும் போல வந்ததால், இரண்டு இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பாக அருகில் இருந்த பொதுமக்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடைத்தனர். சூலூர் போலீசார் விரைந்து சென்று, வெல்டிங் கருவிகளைப் பயன்படுத்தி கம்பத்தை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் தற்போது கம்பத்தை, மோதி சேதப்படுத்திய வாகனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைத்தளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சிக்னல் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி