கிணத்துக்கடவு - Kinathukadavu

கோவை மத்தம்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

கோவை மத்தம்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

கோவையில் உள்ள மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (09. 10. 2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்சார வாரியம் இந்த பராமரிப்பு பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து, மின் விநியோகத்தை வழக்கம் போல மீண்டும் தொடங்க உறுதியளித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முன்னதாகவே முடிந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా