வேளாண் பல்கலையில் மாநில அளவிலான உழவர் தின விழா!

57பார்த்தது
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா நடைபெற உள்ளது. தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியோருடன் இணைந்து இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவில், 250-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், நேரடி பண்ணை செயல் விளக்கங்கள், புதிய பயிர் இரகங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் மாதிரித் திடல்கள் ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், தலைசிறந்த விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கூறுகையில், காலநிலை மாற்றம், விலையேற்றம், விலை வீழ்ச்சி உள்ளிட்டவை விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றன. இந்த சவால்களை சமாளிக்கும் வகையில், வேளாண்மையில் நவீன உத்திகள் என்ற தலைப்பில் உழவர் தின விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி