பாரதியார் பல்கலையின் முன்பு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
கோவை வடவள்ளியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி சார்பில் உறுப்பினரை நியமித்த தமிழக கவர்னர் ரவியை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மரபுகளை மீறி கவர்னர் புதிதாக யுஜிசி சார்பில் உறுப்பினரை நியமித்திருக்கிறார், பல்கலைக்கழக விதிகளை மீறியும் தமிழக கல்வி அமைச்சரை ஆலோசிக்காமலும் அவர் தன்னிச்சையாக உறுப்பினரை நியமித்ததை கண்டித்து போராட்டம் என்றும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை கண்டித்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி