குற்ற தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் இன்று(அக்.07) காலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் கோவை சாலையில் சி. டி. சி டிப்போ அருகில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாகனங்களில் போதை பொருள் உள்ளதா, ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா, வழக்குகளில் தேடப்படும் நபர்கள் உள்ளனரா என போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையின் போது வாகன ஓட்டுனர்களிடம் போலீசார், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது போன்ற அறிகுறிகளை கூறினர்.