கிணத்துக்கடவு - Kinathukadavu

கிணத்துக்கடவு: வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார் உடனுக்குடன் விற்பனையாவதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த வாரத்தில் வாழைத்தார் வரத்து அதிகரித்தும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிணத்துக்கடவு மார்க்கெட்டில், செவ்வாழை கிலோ - 70 ரூபாய், நேந்திரன் - 25, கதளி - 35, பூவன் - 35, ரஸ்தாளி - 40, சாம்பிராணி வகை - 42 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரத்தை விட, செவ்வாழை - 5, கதளி - 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. சாம்பிராணி வகை மட்டும் 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் இது பற்றி கூறும்போது, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் நாளை மற்றும் நாளை மறுநாள், விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా