கோவையில் ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், பேராசிரியர் காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஈஷா யோகா மையத்தின் நடமாடும் மருத்துவ முகாமில் பணிபுரிந்த மருத்துவர் சரவண மூர்த்தி, அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக கடந்த 6ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்று ஈஷா எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் கேள்வி எழுப்பினர். காவல்துறையினர் மருத்துவர் மீதான வழக்கை மெத்தனமாக கையாள்வதாக குற்றம் சாட்டிய பியூஸ் மனுஷ், இந்த வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அது கோவைக்கு அவப்பெயர். இந்த வழக்கிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை முறையாக நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.