ஓணம் விழா ரத்து - நேந்திரன் வாழை விலை சரிவு!

84பார்த்தது
கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு, நேந்திரன் வாழைக்காயின் தேவை அதிகமாக இருப்பதால், விலை உயர்வாக இருக்கும். மேட்டுப்பாளையம் அருகே, அன்னூர் சாலையில் உள்ள வாழைத்தார் மையத்தில் நேற்று (செப்.,11) நடந்த ஏலத்திற்கு, 9, 000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் நேந்திரன் வாழைத்தார், 7,000க்கும் மேல் இருந்தன. ஏலத்தில் எதிர்பார்த்த விலையைவிட, மிக குறைவாக விற்பனை ஆனதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நடந்த ஏலத்தில், ஒரு கிலோ நேந்திரன் குறைந்தபட்சம், 20 ரூபாய்க்கும், அதிகப்பட்சம், 27 ரூபாய்க்கு ஏலம் போனது. அதேபோன்று கதளி வாழையும், ஒரு கிலோ குறைந்தபட்சம், 30 ரூபாய்க்கும், அதிகபட்சம், 60 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த வாரம் கதளியின் விலை குறையாமல் இருந்தது. வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதால் விலை சரிவுக்கு காரணம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி