வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது

78பார்த்தது
கோவை போத்தனூர் பகுதியில் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் தரப்பட்டது. இந்த நிலையில், பாம்பை பிடிக்க சென்ற பாம்பு பிடி வீரர் மோகன், பாம்பை பத்திரமாக மீட்டார். மீட்கப்பட்ட பின்னர் அந்த பாம்பு மரபணு குறைபாடு உடைய அரிய வகை வெள்ளை நாகம் என்பது தெரிய வந்தன. கொடிய விஷம் உடைய இந்த வெள்ளை நாகப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்டன. இந்த பாம்பு வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அதன் வாழ்விடத்தில் விடப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி