தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வருகின்ற அக்டோபர் 9, 2024 புதன்கிழமை அன்று மலர்களில் மதிப்பு கூட்டுதல் பற்றிய ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் பொதுமக்கள், அறிவியல் மாணவர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு பயனடையலாம் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், பல வகைப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட மலர் பொருட்களான பூமாலை, ஜடை பட்டி, நிறமேற்றப்பட்ட மலர்கள், மலர்களைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள் போன்றவற்றை குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதாகும். பயிற்சி காலை 10. 00 மணி முதல் மாலை 4. 30 மணி வரை நடைபெறும். பயிற்சிக் கட்டணம் ரூ. 1000 ஆகும்,
இதில் மதிய உணவு மற்றும் தேநீர் அடங்கும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 8, 2024 செவ்வாய்க்கிழமை மாலை 5. 00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு முனைவர் சு. கார்த்திகேயன் (99654 35081) அல்லது முனைவர் இரா. சித்ரா (99427 66922) ஆகியோரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மலரியல் துறையில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.