திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாய கட்டிடம், ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றை இன்று அமைச்சர் அர. சக்கரபாணி திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், “தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். தமிழ்நாடு அரசின் சார்பில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் உரிமை தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம்” என உறுதி அளித்தார்.