கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கிண்டி அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளோருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஷார்ட் சர்க்யூட் மற்றும் மழை நீர் காரணமாக இந்த மின்தடை ஏற்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.