தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் குளுகுளு சீசனை அனுபவிக்க படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளி தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை என்பதால் சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆர்வத்துடன் வருகின்றனர் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர் மேலும் சிம்ஸ் பூங்காவில் உள்ள படகு இல்லத்தில் படகு சவாரி செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர் வாகனங்கள் அதிக அளவில் நீலகிரி மாவட்டத்தை நோக்கி வருவதால் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.