குறைவான நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மற்றும் உடலில் இருந்து அதிகமாக நீர் வெளியேறுவது மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க சிறந்த வழி பழங்கள் தான். ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, ப்ளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் கொடிமுந்திரி போன்ற பழங்கள் நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் அதிக நீர் அளவைக் கொண்டிருக்கின்றன. இவற்றை சீரான இடைவெளியில் உட்கொள்ளும் பட்சத்தில், இவை மலச்சிக்கலில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.