

கூடலூர்: நறுமணம் வீசும் காபி பூக்கள்
நீலகிரி, தேனி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் காபி பயிரிடப்படுகிறது. 35 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், 14,112 பேர் சிறு விவசாயிகள். தமிழகத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் காபி கொட்டை உற்பத்தியாகிறது. நீலகிரி காபிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால், காபி விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். காபி கொட்டை கிலோ 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளதால், கோடை மழை பெய்தால் பூக்கள் காயாக மாறி நல்ல விளைச்சல் கொடுக்கும். நடப்பாண்டு நல்ல விலை கொடுப்பதால், மழை பெய்தால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.