பல்நோக்குகட்டிடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

53பார்த்தது
நீலகிரி மாவட்டம்
குன்னூர் அருகே உள்ள சின்ன கரும்பாலம் பகுதியில் 2023-2024 நமக்கு நாமே திட்டத்தின்படி ரூ 40 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு சமுதாய கூட கட்டிடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம்
குன்னூர் அருகே உள்ள சின்ன கரும்பாலம் பகுதியில் 2023- 2024 நமக்கு நாமே திட்டத்தின் படி ரூ 40 லட்சம் மதிப்பீட்டில் சின்ன கரும்பாலம் பகுதியில் பல்நோக்கு கட்டிடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசுகையில் நீலகிரி மாவட்டம்
சுமார் 7 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டது அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்கள் அனுப்பட்டு அவர்களிடம் தொடர்பு கொண்டு
எந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என கேட்டு அறிகிறோன்.
கலைஞர் கனவு திட்டத்தின் அனைவரும் வீடு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 1000
வீடுகள் கட்ட வீட்டு வசதித் துறை அமைச்சரிடம் கேட்டு உள்ளேன். முதற்கட்டமாக 100 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கூறினார்
இந்நிகழ்ச்சியில் குன்னுார் சார் ஆட்சியர் சங்கீதா, வட்டாச்சியர் கனி சுந்தரம், ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சுனிதா நேரு உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி