வியாபாரிகள் காவல் நிலையத்தில் குவிந்துள்ளதால் பரபரப்பு

73பார்த்தது
உதகை லோயர் பஜார் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தின் காரணமாக அப்பகுதி டாக்ஸி ஸ்டாண்ட் ஓட்டுநர்கள், மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை மிரட்டியதாக கூறி வியாபாரிகள் சங்கத்தினர் காவல் நிலையத்தில் குவிந்துள்ளதால் பரபரப்பு.


நீலகிரி மாவட்டம் உதகை லோயர் பஜார் பகுதியில் இன்று மதியம் காய்கறி ஏற்றி செல்லும் லாரி மற்றும் சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில் லாரி ஓட்டுனருக்கும், சுற்றுலா வாகன ஓட்டுனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை, மிரட்டியதாகவும், தகாத வார்த்தைகள் பேசியதாகவும், அடிப்பதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மீது உதகை மத்திய காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஒன்று கூடியுள்ளனர்.

இதுகுறித்து மத்திய காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி