மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் உதகை மற்றும் அதன் பகுதியில் இரவு நேரங்களில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சமீப காலமாக உலா வருவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் உதகை அடுத்த அண்ணா காலனி பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும்
இங்கு பகல் நேரத்தில் புலி ஒன்று வளர்ப்பு ஆடுகளை வேட்டையாடி இழுத்துச் சென்றது பொது மக்களிடையே வீதியை ஏற்படுத்தியுள்ளது
ஆடுகளை வைத்து தான் குடும்பமே நடத்தி வருவதாகவும் பகல் நேரத்திலேயே புலி மற்றும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வெளியில் வரக்கூட அஞ்சுவதாகவும் குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரை தினமும் சாலையில் நடமாட கூட பயமாக உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன.
மேலும் இது குறித்து பலமுறை வனத்துறையினர் இடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விரைந்து வனத்துறையினர் நடமாடும் சிறுத்தை மற்றும் புலியை குண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.