கோ-ஆப்டெக்ஸ்விற்பனை நிலையத்திற்குரூ. 75 லட்சம் விற்பனைஇலக்கு

70பார்த்தது
தீபாவளி பண்டிகையையொட்டி ஊட்டியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு ரூ. 75 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவித் தண்ணீர் பேட்டி.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: -

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகளை காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள் உள்பட ஏராளமான ஜவுளி ரகங்கள் உள்ளன.

இதில் சிறப்பம்சமான தோடா இன மக்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட எம்ராய்டரி சால்வைகள் மற்றும் டேபிள் ரன்னர் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்

மேலும் இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி