இர்பான் வீடியோவை நீக்கக்கோரி கடிதம்
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது சேனலில் பதிவிட்ட வீடியோவை நீக்கக்கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது. யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ சர்ச்சையான நிலையில், மருத்துவ நல பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்த நிலையில், வீடியோவை நீக்கவும் யூடியூப் நிறுவனத்திற்கு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளது. முன்னதாக குழந்தையில் பாலினத்தை வெளியிட்டதாக இர்ஃபான் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.