நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தது. முதல் நாள் முழுவதும் மழை பெய்ததால் பிட்ச் ஈரப்பதமாக இருந்தது. இப்படியான நிலையில் இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது தோல்விக்கு முதல் படியாக அமைந்தது. இந்திய அணியின் வேகம் மற்றும் சுழல் பந்துவீச்சு இரண்டுமே நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெரிதாக மிரட்டவில்லை. பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதும் முக்கிய காரணம்.