பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் இருக்கும் படவுனா கிராமத்தில் கியுல் ஆற்றங்கரை பக்கம் தனியாக இருந்த காதலர்களை கிராம மக்கள் பிடித்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். அந்த காதலர்கள் இருவரும் எவ்வளவோ கெஞ்சியும் கிராம மக்கள் காதுகொடுத்து கேட்காமல் இந்த காரியத்தை செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.