மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேகங்கள். காற்று நீராவியால் நிரப்பப்படும் போது மேகங்கள் உருவாகின்றன. மேகத்தில் இருக்கும் நீர் துகள்களின் அடர்த்தி அதிகமானதும் பூமியின் ஈர்ப்பு விசையின் காரணமாக கீழ் நோக்கி மழையாக வருகிறது. நீராவி அடர்த்தியாக இருப்பதால் மேகங்கள் கருப்பு நிறத்தில் தெரிகிறது. அதிகளவு நீரை சேர்த்து வைக்கும் மேகங்கள் மட்டும் மழையாக பொழிவதால் தான் எல்லா இடத்திலும் மழை வருவதில்லை.