சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பின் 15வது மாடியிலிருந்து செல்வமுருகன் என்ற காவலர் அண்மையில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு செல்வமுருகன் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதார்கள். தொடர்ந்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு 30 குண்டுகள் முழங்க காவல்துறை வீர மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.