சேலத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாநில மாவட்ட மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று (அக். 20) நடைபெற்றது. இதில் பேசிய உதயநிதி, “ 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற இளைஞரணி உழைக்க வேண்டும், இந்த வெற்றி உங்கள் கைகளில் தான் உள்ளது.” என அறிவுரை வழங்கினார்.