முதன்முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி!

59பார்த்தது
முதன்முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற நியூசிலாந்து அணி!
மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து மகளிர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. துபாயில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தெ.ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 129 ரன்களை மட்டும் எட்டி, 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நியூசி. வீராங்கனை அமீலியா கெர் ஆட்டநாயகி மற்றும தொடர் நாயகியாக தேர்வானார்.

தொடர்புடைய செய்தி